நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.மா.கா., ஆலோசனை
பவானி, அக். 4-
ஈரோடு மாவட்ட த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பவானியில் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநகர மாவட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சிகாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பவானி-லட்சுமி நகரில் விபத்துக்களை தடுக்க உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். கோவில் நகரமான பவானியில் கோவிலை சுற்றி குப்பை போடுவதை தடுக்க வேண்டும். பவானியில் வெற்றிலை சந்தையை ஏற்படுத்தி நவீனப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.

