ADDED : ஜன 18, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.ஜி.ஆர்.,பிறந்தநாள் விழா
ஈரோடு,: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு, மாவட்ட செயலாளர் ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், முன்னாள் மேயர் மல்லிகா, மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரத்வி உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் பவானி, பெருமாள்புரத்தில் எம்.ஜி.ஆர்., போட்டோவுக்கு, எம்.எல்.ஏ., கருப்பணன் மலர்துாவி மரியாதை செய்தார். கோபியில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு, எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.