ADDED : ஜூலை 08, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :தமிழ்நாடு கிராம பகுதி சுகாதார செவிலியர் சங்க கூட்டமைப்பு சார்பில், பெருந்திரள் முறையீடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர்கள் சாந்தா, லதா தலைமை வகித்தனர். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் செந்தாமலர், உஷாராணி, லோகநாயகி உட்பட பலர் பேசினர்.
திண்டுக்கல்லில் நடந்த பிரஸ் மீட்டில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கிராம சுகாதார செவிலியர்கள் பற்றி உண்மைக்கு மாறாக பேசியதை திரும்ப பெற வேண்டும். கிராமப்புற சுகாதார செவிலியர்களின் காலி துணை மைய பணியிடங்களை நிபந்தனையின்றி நிரப்ப வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.