/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிக்கிய டூவீலர் திருடர்கள்11 வாகனங்கள் பறிமுதல்
/
சிக்கிய டூவீலர் திருடர்கள்11 வாகனங்கள் பறிமுதல்
ADDED : மார் 16, 2025 01:28 AM
சிக்கிய டூவீலர் திருடர்கள்11 வாகனங்கள் பறிமுதல்
ப.வேலுார்:-வாகன திருட்டில் ஈடுபட்ட, இரண்டு பேரை கைது செய்த போலீசார், 11 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
ப.வேலுார் அருகே, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பூங்கா முன், நேற்று முன்தினம் மாலை, டி.எஸ்.பி., சங்கீதா, இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டூவீலரில் வேகமாக வந்த, இரண்டு இளைஞர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் விசாரித்தபோது, ஓட்டிவந்த
டூவீலருக்கு முறையான ஆவணங்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.மேற்கொண்டு நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டம், நெரூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் யுவராஜ் 30, தாமஸ் மகன் பிரனேஷ், 20, என்பதும்; இவர்கள் இருவரும், ஜேடர்பாளையம், நல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில், இரவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ள டூவீலர்களை திருடி வந்ததும் தெரியவந்தது. மேலும், 11 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாயாகும். ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்
பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.