/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்டர் மீடியன் கற்களால் அத்தாணி சாலையில் ஆபத்து
/
சென்டர் மீடியன் கற்களால் அத்தாணி சாலையில் ஆபத்து
ADDED : ஆக 15, 2024 01:26 AM
கோபி, கோபி, பா.வெள்ளாளபாளையம் பிரிவு அருகேயுள்ள சென்டர் மீடியன் கற்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோபி-அத்தாணி சாலையில், பா.வெள்ளாளபாளையம் பிரிவு அருகே பிரதான சாலையில், சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த கற்களின் முகப்பில், வாகன ஒட்டிகள் அறியும் வகையில், ஒளிரும் விளக்குகளுடன் கூடிய கம்பம் நிறுவப்பட்டுள்ளது. தற்போது கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியே இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள், சென்டர் மீடியன் கற்கள் இருப்பது அறியாமல், அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், ஒளிரும் விளக்கு கம்பத்தை புதுப்பித்து வைக்க, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.