/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இனாம் நிலங்களை அபகரிக்கும் முயற்சி சிவன்மலையில் விவசாயிகள் ஆர்பாட்டம்

ADDED : ஜூலை 02, 2024 07:21 AM
காங்கேயம், : இனாம் நிலங்களை கோவில் நிலங்கள் எனக்கூறி அபகரிக்கும் முயற்சியை கைவிடக்கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், காங்கேயம் அருகே சிவன்மலை கோவில் அடி-வாரம் பகுதியில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார்.கடந்த சில ஆண்டுகளில் குத்தகையாளர்களாக மாற்றப்பட்ட அனைத்து விவசாயிகளின் குத்தகைகளையும் ரத்து செய்ய வேண்டும். இனாம் ஒழிப்பின் போது பட்டா பெற்று அனுப-வத்தில் உள்ள மக்களின் நில உரிமைகளை பத்திரப்பதிவுக்கு தடை ஏற்படுத்துவதன் மூலமும், பூஜ்ஜியம் மதிப்பு செய்வதன் மூலமும், நிலம் பறிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொது செயலாளர் முத்து விஸ்வநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்-கத்தின் தலைவர் முகிலன், பெண்கள் உள்பட, 500க்கும் மேற்-பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.