/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் தேசியக்கொடி விற்பனை தீவிரம்
/
மாநகரில் தேசியக்கொடி விற்பனை தீவிரம்
ADDED : ஆக 13, 2024 07:41 AM
ஈரோடு: நாட்டின், 78வது சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈரோட்டில் தேசியக்கொடி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நேதாஜி மார்க்கெட், பெரியார் வீதி, புது மஜீத் தெரு ஆகிய இடங்களில் பேப்பர் மார்ட் மொத்த வியாபார கடைகள், ஸ்டேஷனரி கடைகள், பேன்ஸி ஸ்டோர்ஸ், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் மற்றும் மளிகை கடைகளில் கொடி விற்பனை துவங்கியள்ளது.
தேசியக் கொடி, வரைபட காகிதம், காகித அட்டை, ஆடையில் அணியும் கொடி, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தும் வகையிலான கொடி, அலுவலகங்களில் மேஜையில் வைக்கும் கொடி என பல வகையான கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்திய வரைபடம், காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களின் உருவம் பொறித்த தேசியக்கொடிகள், பேட்ஜ், பேப்பர் தோரணம், பிளாஸ்டிக் தோரணமும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கடை உரிமையாளர்கள் கூறியதாவது: பேப்பர் கொடி (குண்டூசியுடன்), 100 எண்ணிக்கை கொண்டு, 20 ரூபாய் முதல் 30 ரூபாய், அட்டைக்கொடி, 15 ரூபாய், சிந்தடிக் ஃபாம் கொடி, 40 ரூபாய், கார் டேஸ்போர்டு, டூவிலர்களில் வைக்கப்படும் ஸ்டாண்ட் கொடி சிறியது, 40 ரூபாய், பெரியது, 150 ரூபாய், டபுள் கொடி, 45 முதல் 70 ரூபாய், பேப்பர் தொப்பி (100 எண்ணிக்கை) 10 முதல் 25 ரூபாய், துணி தொப்பி ஒன்று, 25 ரூபாய் முதல், 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் துணிக்கொடிகள் அளவுக்கு தக்கபடி, 30 ரூபாய் முதல் 60 ரூபாய், பாலியஸ்டர் கொடி, 25 ருபாய் முதல், 60 ரூபாய், வெல்வெட் கொடி, 50 ரூபாய் முதல், 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பேப்பர் தோரணம், 1,000 எண்ணிக்கை, 250 ரூபாய், பிளாஸ்டிக் ரெடிமேட் தோரணம், 90 ரூபாய் முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு கூறினர்.

