/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'3 மாதமாக சம்பளம் வரல' மாநகராட்சி ஊழியர் மனு
/
'3 மாதமாக சம்பளம் வரல' மாநகராட்சி ஊழியர் மனு
ADDED : மே 08, 2024 02:31 AM
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சியில் தினமும், 290 டன் குப்பை சேகரமாகிறது. திடக்கழிவு
மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பையை அரைத்து பதப்படுத்தி,
உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக
மாநகராட்சியில், 24 நுண்ணுயிர் செயலாக்க மையம் செயல்பட்டு
வருகிறது. இந்த நுண்ணுயிர் உரங்கிடங்குகளில், 50க்கும் மேற்பட்ட
பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு
கடந்த மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து
மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம், நேற்று மனு தந்தனர்.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆணையர் அழைத்து பேசினார்.
ஓரிரு நாட்களில் நிலுவை ஊதியத்தை வழங்கவும் உத்தரவிட்டார்.

