ADDED : ஆக 30, 2024 01:02 AM
டி.என்.பாளையம், ஆக. 30- -
டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம், தோப்பூரை சேர்ந்தவர் சத்யா, 40; கணவர் ரங்கநாதன் இறந்துவிட்டார். தந்தை முத்தானுடன் வசித்து வருகிறார். சத்யாவின் மகள் நிவேதா, 24; இவரின் கணவர் சத்தி அருகே கொண்டப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, 25; காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், தாய் வீட்டில் ஓராண்டுக்கும் மேலாக நிவேதா வசித்து வருகிறார்.
நிவேதாவை பலமுறை குடும்பம் நடத்த அழைத்தும், அவர் மறுத்துள்ளார். இதற்கு மாமியாரே காரணம் என நினைத்துள்ளார். நேற்று அதிகாலை, 1:00 மணி அளவில் மாமியார் வீட்டுக்கு சென்ற கார்த்தி, கோவிலில் வைத்திருக்கும் வேலால் அவரது கழுத்து, மார்பு மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். அவர் சத்தமிட்டதால் எழுந்த தந்தை முத்தான் தடுத்துள்ளார். அவரையும் இடது தோள்பட்டையில் குத்திவிட்டு ஓட்டம் பிடித்து விட்டார். இருவரும் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தலைமறைவான கார்த்தியை, பங்களாபுதுார் போலீசார் தேடி வருகின்றனர்.