/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் ஆராதனை மகோத்சவம்
/
ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் ஆராதனை மகோத்சவம்
ADDED : ஆக 17, 2024 04:24 AM
ஈரோடு: ஈரோடு, அக்ரஹார வீதியில் உள்ள ஸ்ரீபாதராஜ மடத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின், 353வது ஆராதனை மகோத்சவம் வரும், 20ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி, 20ம் தேதி மாலை, 6:00 மணிக்கு நவபிருந்தாவன பஜனா மண்டலி குழுவினரின் பக்தி இசை கச்சேரி நடக்கிறது. 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஸ்ரீராகவேந்திர சுவாமி ஸ்தோத்திர ேஹாமம் நடக்கிறது. 22ம் தேதி காலை, 10:00 மணிக்கு ஸ்ரீனிவாசன திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது. மேலும், 20, 21, 22 தேதிகளில் காலையில் நிர்மால்ய விசர்ஜனம், சேவா சங்கல்பம், ரதோத்ஸவம், கனகாபிேஷகம், மாலையில் தேவரநாம பஜனை, ஸ்வஸ்தி பல மந்திராக்ஷதை நடக்கிறது. விழாவுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, காணிக்கைகளை பக்தர்கள் வழங்கி, ரசீது பெறலாம்.

