/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் மூழ்கி பலி கரை ஒதுங்கிய உடல்
/
வாய்க்காலில் மூழ்கி பலி கரை ஒதுங்கிய உடல்
ADDED : செப் 04, 2024 09:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: புன்செய் புளியம்பட்டி, ராமநாதபுரத்தை சேர்ந்-தவர் குணசேகரன், 39; சத்தி அருகேயுள்ள அவரது சகோதரர் வீட்டு விசேஷத்துக்கு நேற்று முன்-தினம் வந்தார். செண்பகபுதுார் கீழ்பவானி வாய்க்-காலில் குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல்போனை தொடர்பு கொண்ட-போது, வேறு ஒருவர் பேசினார்.
மொபட்டும், மொபைல்போனும் வாய்க்கால் கரையில் இருந்ததாகவும், ஆட்கள் யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்தி சத்தியமங்கலம் போலீசில் புகார் தரப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை கீழ்பவானி வாய்க்காலில், குணசேகரன் உடல் கரை ஒதுங்-கியது. சத்தி போலீசார் மீட்டு சத்தி அரசு மருத்து-வமனைக்கு அனுப்பி வைத்தனர்.