/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குவாரியில் இருவர் பலி விவகாரத்தில் 4 பேர் இடமாற்றம் 'மாவட்ட நிர்வாகத்தின் கண்துடைப்பு நடவடிக்கை'
/
குவாரியில் இருவர் பலி விவகாரத்தில் 4 பேர் இடமாற்றம் 'மாவட்ட நிர்வாகத்தின் கண்துடைப்பு நடவடிக்கை'
குவாரியில் இருவர் பலி விவகாரத்தில் 4 பேர் இடமாற்றம் 'மாவட்ட நிர்வாகத்தின் கண்துடைப்பு நடவடிக்கை'
குவாரியில் இருவர் பலி விவகாரத்தில் 4 பேர் இடமாற்றம் 'மாவட்ட நிர்வாகத்தின் கண்துடைப்பு நடவடிக்கை'
ADDED : ஆக 24, 2024 01:26 AM
ஈரோடு, ஆக. 24-
டி.என்.பாளையம் அருகே புஞ்சை துறையம்பாளையத்தில் கல் குவாரியில் கடந்த, 20ல் நடந்த வெடி விபத்தில், 2 பேர் பலியாகினர். குவாரி முறையான உரிமம் பெறாமல் செயல்பட்டதும், இதுபற்றி புகார் தெரிவிக்கவில்லை எனக்கூறி புஞ்சை துறையம்பாளையம் 'அ' கிராம வி.ஏ.ஓ., நடராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், 'குவாரி முறைகேடாகவும், உரிமம் இன்றியும் செயல்படுவதாகவும், குவாரிக்கு புதிதாக அனுமதி வழங்கக்கூடாது' என்றும், நடராஜ் சில முறை புகார் வழங்கியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், நடவடிக்கை எடுத்தால் போராட்டம் செய்வதாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் அறிவித்தது. இந்நிலையில் கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்ட நிலையில், அவரது சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேநேரம் கோபி தாசில்தார் கார்த்திக், நம்பியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், கோபி பொது வினியோக திட்ட தாசில்தார் வெங்கடேஸ்வரன், கோபி தாசில்தார் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் உத்தரவிடப்பட்டது. தவிர, கோபி மண்டல துணை தாசில்தார் இலக்கியசெல்வன், சத்தியமங்கலம் மண்டல துணை தாசில்தாராகவும், சத்தி மண்டல துணை தாசில்தார் திருமூர்த்தி, கோபிக்கும் மாற்றப்பட்டனர்.
'குவாரியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் பினாமியாக செயல்படுவதால், எந்த அதிகாரி மீதும் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை. குறிப்பாக, கனிம வளத்துறையின் முழு ஆதரவுடன் குவாரி இயங்கியது. இதை மாவட்ட நிர்வாகம் அறிந்தும், அவர்களுக்கு ஆளும்கட்சியின் உயர்மட்டம் வரை செல்வாக்கு உள்ளதால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என வருவாய் துறையினர் கொதித்துள்ளனர்.

