sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முல்லைக்கு உரிய விலை கிடைக்காமல் கவலை

/

முல்லைக்கு உரிய விலை கிடைக்காமல் கவலை

முல்லைக்கு உரிய விலை கிடைக்காமல் கவலை

முல்லைக்கு உரிய விலை கிடைக்காமல் கவலை


ADDED : ஜூலை 08, 2024 07:03 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.புளியம்பட்டி : புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் முல்லை பூ, மல்லிகை, சம்-பங்கி, சாகுபடி நடக்கிறது.

அறுவடை செய்யப்படும் பூக்கள் கேரளா, கர்நாடகா மாநிலங்க-ளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முல்லை பூவுக்கு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்-ளது. திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே முல்லை பூ விலை உயர்கிறது. மற்ற நாட்களில் விலை குறைவாக விற்-பனை ஆவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதுகு-றித்து விவசாயிகள் கூறியதாவது: முல்லை பூ ஒரு ஏக்கருக்கு, 1,200 நாற்று நடப்படுகிறது. நடவு நட்டு ஆறு மாதங்களுக்கு பிறகே பூக்கள் நன்கு பூக்கும். சீசன் துவங்கினால் தொடர்ந்து ஏழு மாதங்-களுக்கு தினமும் பூக்கள் பறித்துக் கொண்டே இருக்கலாம். நன்கு விளைந்தால், ஒரு ஏக்கரில் தினமும், 100 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தாண்டு விளைச்சல் கணிசமாக அதிகரித்-துள்ளது. முகூர்த்த நாட்களில் கிலோ, 300 ரூபாய் வரை விற்ப-னையான முல்லை, சாதாரண நாட்களில், 80 ரூபாய் முதல் 100 ரூபாய் கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது. இதனால் நஷ்டம் தான் ஏற்படுகிறது.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us