ADDED : ஆக 31, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம் முத் துாரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 24; இவர் வீட்டு முன் நிறுத்தப் பட்டிருந்த யமாஹா பைக் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் டூவீலரை திருடிய கரூர் மாமாட்டம் தோகமலை, கீழ்வேலியூரை சேர்ந்த சரத்குமார், 32, என்பவரை கைது செய்தனர்.அவரிடம் விச ாரணை நடத்தியதில் பல்வேறு இடங்களில் ஐந்து டூவீலர்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். கைது செய்த போலீசார், காங்கே யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து
ஐந்து டூவீலர்களும் மீட்கப்பட்டன.