நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:
நுாறு நாள் வேலைத்திட்ட
தொழிலாளர்களுக்கு, கூலி வழங்காததை கண்டித்து, அந்தியூர் கனரா
வங்கி முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்,
ஒப்பாரி வைக்கும் போராட்டம் நேற்று
நடந்தது.
அந்தியூர் தாலுகா
இ.கம்யூ., செயலாளர் முருகேசன், வி.தொ.ச., தாலுகா செயலாளர்
பழனிச்சாமி முன்னிலையில், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்காத
மத்திய அரசை கண்டித்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்
நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.