நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :கேரள மாநில மக்களின் முக்கிய விழாவான ஓணம் பண்டிகை, உலகம் முழுவதும் உள்ள மலையாளி மக்களால் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஈரோட்டில் வசிக்கும் கேரளவாழ் மக்கள் புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டனர்.
கருங்கல்பாளையம் கமலாநகரில் ஒரு வீட்டில் கேரள பெண்கள் ஒன்றிணைந்து, பல்வேறு பூக்களால் கதகளி உருவத்தில் கோலமிட்டனர். பின் கிருஷ்ணர் சிலை வைத்து ஓணம் பாட்டுப்பாடி கேரள மன்னர் மாகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.
மதியம் ஓணம் சத்யா எனப்படும் அவியல், பொறியல், கூட்டு, எரிசேரி என, 16 வகை உணவுகளை சமைத்து குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். ஒருசில வீடுகளில் சிறுவர், சிறுமிகளுக்கு மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்தும் ஓணம் கொண்டாடப்பட்டது.