/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளி வீட்டில்ரூ.1 லட்சம் திருட்டு
/
தொழிலாளி வீட்டில்ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : மார் 28, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளி வீட்டில்ரூ.1 லட்சம் திருட்டு
பவானி:ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் நாதுராம். 43:; ஆப்பக்கூடல் மாகாளி வீதியில் தங்கியிருந்து, டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வருகிறார். வீட்டின் பூட்டு சாவி தொலைந்து போனதால், அறையில் இருந்த பீரோவை மட்டும் பூட்டிவிட்டு, கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலையில் வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த, ௧ லட்சம் ரூபாயை காணவில்லை என்று, ஆப்பக்கூடல் போலீசில் புகாரளித்துள்ளார்.