/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை கொங்கு பள்ளி பிளஸ் 2 தேர்வில் முதல் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
/
பெருந்துறை கொங்கு பள்ளி பிளஸ் 2 தேர்வில் முதல் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
பெருந்துறை கொங்கு பள்ளி பிளஸ் 2 தேர்வில் முதல் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
பெருந்துறை கொங்கு பள்ளி பிளஸ் 2 தேர்வில் முதல் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 02:36 AM
பெருந்துறை:பிளஸ் 2 பொதுத் தேர்வில், பெருந்துறை, கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் முதல் வகுப்பில், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில், 600க்கு 589 மதிப்பெண்கள் பெற்று திவேகா முதலிடமும், 587 மதிப்பெண்கள் பெற்று அம்சவர்த்தினி மற்றும் கீர்த்தி ஆகியோர் இரண்டாமிடமும், 584 மதிப்பெண்கள் பெற்று மிதுனா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். இப்பள்ளி, 34 ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. தேர்வு எழுதிய, 176 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்துள்ளனர். 575 மதிப்பெண்களுக்கு மேல், 7 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல், 25 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 74 பேரும் பெற்றுள்ளனர்.
பாட வாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் விபரம்: கணிதத்தில் ஒருவரும், கணினி அறிவியலில், 16 பேரும், கணினி பயன்பாடுகளில், 2 பேரும், கணக்கு பதிவியலில், 9 பேரும், வணிகவியலில், 7 பேரும், வணிகக் கணிதத்தில் ஒருவரும், பொருளியலில், 3 பேரும் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், கற்பித்த ஆசிரியர்கள், முதல்வர் முத்துசுப்பிரமணியன் ஆகியோருக்கு, பள்ளி தலைவர் யசோதரன், தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் குமாரசாமி, இணைச் செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாக குழுவினர் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.