/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்தில் ௨ வாலிபர் பலி அடையாளம் தெரிந்தது
/
விபத்தில் ௨ வாலிபர் பலி அடையாளம் தெரிந்தது
ADDED : செப் 08, 2024 01:05 AM
விபத்தில் ௨ வாலிபர் பலி
அடையாளம் தெரிந்தது
பவானி, செப். 8-
பவானி அருகே தாளப்பையனுாரில், நேற்று முன்தினம் இரவு, 9:45 மணியளவில், சரக்கு வேன் மீது, பல்சர் பைக் மோதியது. இதில் பைக்கில் பயணித்த இரு வாலிபர்களும் பலியாகினர். இவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வந்தனர். பலியான இருவரின் விபரமும் நேற்று தெரிந்தது. பர்கூர்மலை, தாளக்கரை கெம்பன் மகன் கார்த்திக், 18; அத்தாணியில் ஒரு பேக்கரி டீ மாஸ்டர். பர்கூர், குன்றியை சேர்ந்த மூர்த்தி மகன், 18; அதே பேக்கரியில் சப்ளையராக வேலை செய்தார். இருவரும் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, விபத்தில் சிக்கி பலியானதாக, போலீசார் தெரிவித்தனர்.