/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
11 கி.மீ.,ல் 25 வேகத்தடை புலம்பும் வாகன ஓட்டிகள்
/
11 கி.மீ.,ல் 25 வேகத்தடை புலம்பும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 05, 2024 03:13 AM
ஈரோடு: ஈரோட்டில் இருந்து, சித்தோடு செல்லும் சாலையில், 11 கி.மீ., துாரத்தில், 25 வேகத்தடைகள், எட்டு சிறு மேடான பாலம் உள்-ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ஈரோட்டில் இருந்து, சித்தோடு வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக, ஈரோடு-சித்தோடு வரை, 11 கி.மீ., நீளமுள்ள சாலை பணி முடிக்கப்பட்டு, மைய தடுப்பு, சிறிய பாலம், வேகத்தடை அமைத்துள்ளனர். சாலையை விரிவாக்கம் செய்து, பேரிகார்டுகள் வைத்ததால், போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் குறைந்துள்ளன. ஆனால், சாலையில் வேகத்தடைகள் மிக அதிகமாக வைத்துள்ளதால், டூவீலர் முதல் கனரக வாகனங்கள் வரை ஓட்டி செல்வதில் சிரமப்படுகின்றனர். இதுபற்றி, வாகன ஓட்டிகள் கூறியதாவது:ஈரோடு-சித்தோடு சாலை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்துள்ளதால், போக்கு-வரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால், 11 கி.மீ., துாரத்துக்குள், 25 வேகத்தடை, எட்டு சிறிய பாலத்தை மேடாக அமைத்துள்ளது, தலைவலியை ஏற்படுத்துகிறது. சராசரி-யாக ஒரு கி.மீ.,க்கு, 2 என்ற வகையில் வேகத்தடையை அமைத்-துள்ளனர். அச்சாலையை தொடர்ந்து செல்பவர்கள் முதுகு வலியால் சிரமப்படுகின்றனர். பஸ்கள், கனரக வாகனங்களில் அதிகமாக பழுது ஏற்படுவதாகவும் வருந்துகின்றனர். இப்பிரச்-னைக்கு தீர்வு காணும் வகையில், அவசியமான ஓரிரு இடங்-களில் மட்டும் வேகத்தடையை வைத்துவிட்டு, மற்றவற்றை அகற்ற வேண்டும்.இவ்வாறு கூறினர்.