/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் விதி மீறலில் ஒரே நாளில் 3 வழக்கு பதிவு
/
தேர்தல் விதி மீறலில் ஒரே நாளில் 3 வழக்கு பதிவு
ADDED : ஏப் 16, 2024 01:34 AM
ஈரோடு;ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் மரப்பாலம், கே.ஏ.எஸ். நகர், சிந்தன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளின் முன் கதவு மற்றும் சுவரில் மறைந்த தமிழக முதல்வர், தமிழக முதல்வர், ஈரோடு தொகுதி தி.மு.க., வேட்பாளர் போட்டோ மற்றும் தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்பது போன்ற ஸ்டிக்கர் உரிய அனுமதியின்றி ஒட்டப்பட்டு இருந்தது. நிலைக்குழு புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* திருப்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், நேற்று முன் தினம் பவானியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின், அதே பகுதியில் அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, நிலைக்குழு புகாரின்படி, பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
* பவானியில், அம்பேத்கர் சிலைக்கு இ.கம்யூ., செயலாளர் பால முருகன் தலைமையில், 20 பேர், தேர்தல் விதிமுறைக்கு புறம்பாக கட்சி அடையாளங்களுடன் வந்து மாலை அணிவித்து சென்றது தொடர்பாக நிலைக்குழுவினர் அளித்த புகாரின்படி, பவானி போலீசார் வழக்குப்
பதிவு செய்தனர்.

