ADDED : ஜூலை 12, 2024 01:42 AM
டி.என்.பாளையம், டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியில் சேர்ந்தவர் நாகராஜ், 27, சலவை தொழிலாளி. சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணமானது. கடந்த மார்ச்,- 2-ம் தேதி நள்ளிரவில் வீட்டில் புகுந்த கும்பல், ௧௦.௫ பவுன் தங்க நகையை திருடி சென்றது. இதுகுறித்த புகாரின்படி பங்களாபுதுார் போலீசார், களவாணிகளை தேடி வந்தனர்.
இது தொடர்பாக கே.என்.பாளையம், அம்மன் கோவில் வீதி ரங்கநாதன் மகன் மாதவன், 23; கோவை, மேட்டுப்பாளையம், புஞ்சவன வீதி செல்வக்குமார் மகன் அரவிந்தன், 23, ஆகியோரை கைது செய்தனர். திருடிய நகைகளை கோவை, மேட்டுப்பாளையம், அண்ணாச்சி நகரை சேர்ந்த அப்பாஸ், 33, என்பவரிடம் கொடுத்து வைத்ததாக கூறினர். மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். திருடிய பத்தரை பவுன் நகையை பறிமுதல்
செய்தனர்.