ADDED : அக் 18, 2026 06:31 AM
ஈரோடு,:ஈரோடு
சூரம்பட்டி எஸ்.ஐ.,யாக இருப்பவர் குணசேகரன். கடந்த, 14ம் தேதி மாலை
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கு நின்றிருந்த நான்கு பேர்,
சத்தம்போட்டு தகாத வார்த்தை பேசி கொண்டிருந்தனர்.
அவர்களிடம்
விசாரித்தபோது குமலன்குட்டையில் ஒரு ஹோட்டலில் மது போதையில் நடந்த
பிரச்னைக்காக, சூரம்பட்டி போலீசாரால் விசாரணைக்கு
அழைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. பெண்கள் நிற்கும் இடத்தில்
இப்படி கெட்ட வார்த்தை பேசலாமா? என்று, எஸ்.ஐ., கண்டித்தபோது,
அவரையும் தகாத வார்த்தை பேசி, விசாரணைக்கு வர முடியாது என்று கூறி
மிரட்டல் விடுத்தனர்.
எஸ்.ஐ., குணசேகரன் அளித்த புகாரின்படி,
ஈரோடு மரப்பாலம் அலாவுதீன் மகன் முகமது ஹக்கீம், 21, சமையல்
தொழிலாளி; கருங்கல்பாளையம் அரசரத்தினம் மகன் சபரி நாதன், 27,
டிரைவர் என இருவரை மறுநாள் கைது செய்தனர். சூரம்பட்டி வலசு
சதீஷ்குமாரை, 42, நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அலாவுதீனை
தேடி வருகின்றனர்.
