/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை அருகே சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு
/
சென்னிமலை அருகே சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு
ADDED : ஆக 11, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை அருகே வாய்ப்பாடி ஊராட்சி தோட்டத்துபுதுாரில், தனியார் ஒருவருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை அருகில், வேலி மற்றும் நிறைய மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரத்தின் மீது மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை, காவலாளி நேற்று பார்த்தார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தரப்பட்டது. அவர் உத்தரவின்படி சென்னிமலை மற்றும் வாய்ப்பாடியில் உள்ள வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்றனர்.
ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, சாக்குப்பையில் போட்டு, அந்தியூரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

