/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு லோக்சபாவில் பதிவான 70.59 சதவீத ஓட்டு மாலை 6:00 மணிக்குள் முடிவு தெரிய வாய்ப்பு
/
ஈரோடு லோக்சபாவில் பதிவான 70.59 சதவீத ஓட்டு மாலை 6:00 மணிக்குள் முடிவு தெரிய வாய்ப்பு
ஈரோடு லோக்சபாவில் பதிவான 70.59 சதவீத ஓட்டு மாலை 6:00 மணிக்குள் முடிவு தெரிய வாய்ப்பு
ஈரோடு லோக்சபாவில் பதிவான 70.59 சதவீத ஓட்டு மாலை 6:00 மணிக்குள் முடிவு தெரிய வாய்ப்பு
ADDED : ஜூன் 04, 2024 04:50 AM
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான, 70.59 சதவீத ஓட்டுகள் மாலை, 6:00 மணிக்குள் எண்ணி முடிக்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம், தாராபுரம் ஆகிய, 6 சட்டசபை தொகுதியில், 7 லட்சத்து, 44,927 ஆண்கள், 7 லட்சத்து, 93,667 பெண்கள், 184 மூன்றாம் பாலினத்தவர் என, 15 லட்சத்து, 38,778 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் கடந்த ஏப்., 19 ல் 5 லட்சத்து, 31,889 ஆண்கள், 5 லட்சத்து, 54,311 பெண்கள், 87 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 10 லட்சத்து, 86, 287 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்திருந்தனர். இது, 70.59 சதவீதமாகும். சட்டசபை தொகுதி வாரியாக தலா, 14 மேஜைகளில் மின்னணு ஓட்டுக்களும், 9 மேஜைகளில் தபால் ஓட்டும் எண்ணப்படுகிறது.
குமாரபாளையம், மொடக்குறிச்சி தொகுதிக்கு தலா, 20 சுற்றும், ஈரோடு கிழக்கு, 17 சுற்று, ஈரோடு மேற்கு, தாராபுரம், காங்கேயம் தொகுதிகள், 22 சுற்றிலும் எண்ணி முடிக்கப்படுகிறது.
தபால் ஓட்டுக்கள் காலை, 11:00 மணிக்குள்ளும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் மாலை, 6:00 மணிக்குள்ளும் எண்ணி முடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறு சட்டசபை தொகுதியிலும் முதல் சுற்று முடிந்ததும், அவற்றை மொத்தமாக கூட்டி, முதல் சுற்றில் பதிவான ஓட்டு மற்றும் ஒவ்வொரு வேட்பாளருக்குமான ஓட்டு விபரத்தை தெரிவிப்பார்கள். முன்னதாக, அதனை சரி பார்த்து, தேர்தல் நடத்தும் அலுவலர் கையெழுத்திட்டு, தேர்தல் ஆணைய தளத்தில் வெளியிடப்படும்.