/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒரே நாளில் ரூ.7.18 லட்சம் பறிமுதல்
/
ஒரே நாளில் ரூ.7.18 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 18, 2024 01:26 AM
ஈரோடு,ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில், லுங்கிகள், துண்டு உட்பட, 7.18 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மேற்கு தொகுதியில், பவானி - கவுந்தப்பாடி சாலையில் வாகன தணிக்கையில், 500 லுங்கிகள், 480 துண்டு, 360 கிலோ நுால் என, 1.34 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை உட்பட மாவட்ட அளவில், 7.18 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட அளவில் இதுவரை, 5 கோடியே, 56 லட்சத்து, 70,839 ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில், 4 கோடியே, 35 லட்சத்து, 38,843 ரூபாய் ரொக்கமாகும். அதில், உரிய ஆவணங்களை சமர்பித்து, 3 கோடியே, 68,863 ரூபாயை திரும்ப பெற்று சென்றனர். மீதமுள்ள, 1 கோடியே, 34 லட்சத்து, 69,980 ரூபாயை மாவட்ட கருவூலத்தில் செலுத்தி வைத்துள்ளனர்.

