/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சேவல் சண்டை சூதாட்டம் 13 பேர் கும்பல் சிக்கியது
/
சேவல் சண்டை சூதாட்டம் 13 பேர் கும்பல் சிக்கியது
ADDED : செப் 01, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்த மாரம்பாளையம் முந்திரி மேட்டில், சேவல் சூதாட்டம் நடப்பதாக, புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். சத்தி, பவானிசாகர், மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, 13 பேரை கைது செய்தனர். 13 இருசக்கர வாகனங்கள், சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ஐந்து சேவல், 11 மொபைல்போன் மற்றும் 97 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.