/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உயிரை பணயம் வைத்து அகற்றினாலும் மீண்டும் மீண்டும் வரும் ஆ.தாமரை
/
உயிரை பணயம் வைத்து அகற்றினாலும் மீண்டும் மீண்டும் வரும் ஆ.தாமரை
உயிரை பணயம் வைத்து அகற்றினாலும் மீண்டும் மீண்டும் வரும் ஆ.தாமரை
உயிரை பணயம் வைத்து அகற்றினாலும் மீண்டும் மீண்டும் வரும் ஆ.தாமரை
ADDED : ஜூலை 01, 2024 03:49 AM
கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டி செல்லும் தண்ணீரில் குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று, பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதேசமயம் பவானி ஆற்றில் தண்ணீரில் அடித்து வரப்படும், ஆகாயத்தாமரை செடிகள் தடுப்பணை மீது தேங்கி நிற்பது தொடர்கதையாகி விட்டது.
பாசன உதவியாளர்கள், மீனவர்கள் விஷ ஜந்துக்கள் குடிகொண்டிருக்கும் ஆகாயத்தாமரை செடிகளை, உயிரை பணயம் வைத்து அகற்றுகின்றனர். ஆனாலும் அகற்ற அகற்ற வந்து கொண்டே இருப்பதால் தலைவலிக்கு ஆளாகியுள்ளனர். நீர்நிலைகளை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள், வெள்ளத்தில் அடித்து வரப்படுகிறது. பலத்த மழை பெய்தால் நீரில் தானாக அடித்து செல்லும் வாய்ப்புள்ளது. இதனால் கனமழையை எதிர்நோக்கியுள்ளனர்.