sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

/

வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வனப்பகுதி கோவிலில் மஹா சிவராத்திரி விழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்


ADDED : பிப் 27, 2025 03:49 AM

Google News

ADDED : பிப் 27, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பவானிசாகர் அருகே வனப்பகுதி கோவிலில், தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடுத்துள்ள விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி, அய்யம்பாளையம் கிராமத்தில் தொட்-டம்மா, சின்னம்மா மற்றும் மஹாலட்சுமி கோவில்கள் உள்ளன. நடப்பாண்டு, மஹா சிவராத்திரி விழாவையொட்டி கிராம தெய்-வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு விழா தொடங்கியது. கிராமத்தில் உள்ள குரும்பர் இன மக்கள், பாரம்பரியமாக குல-தெய்வங்களிடம் அருள் கிடைக்க வேண்டி வழிபட்டனர். அருள் கிடைத்த பக்தர்கள், தாங்களாகவே சுவாமி முன் குவித்து வைக்-கப்பட்ட தேங்காய்களை எடுத்து தலையில் உடைத்து நேர்த்திக்-கடன் செலுத்தினர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பவானி ஆற்றுக்கு அம்மன் அழைப்பதற்காக புறப்-பட்டு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்து, ஆற்றங்கரை-யிலும் அருள் வந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தனர். பின்னர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வல-மாக இரவு கோவிலை வந்தடைந்தனர். பின், பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழி-பட்டனர். இரவு முழுவதும் கண்விழித்து மஹாசிவராத்திரி விழாவை கொண்டாடினர். விடிய விடிய நடந்த விழாவில் கோவை மாவட்டம், தீத்திபாளையம், அஜ்ஜனுார், கல்வீரம்பா-ளையம், சின்னத்தடாகம், கெம்பையனுார், வண்டிக்காரனுார், சுண்டப்பாளையம், கஸ்துாரிபாளையம் கிராமங்களிலிருந்து குரும்பர் இன மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us