/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபட்டுகள் மோதலில் 'ஏசி' மெக்கானிக் பலி
/
மொபட்டுகள் மோதலில் 'ஏசி' மெக்கானிக் பலி
ADDED : ஜூன் 19, 2024 02:11 AM
ஈரோடு;சேலம், அரிசிபாளையம், சின்னப்பன் வீதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பிரபாகரன், 29; 'ஏசி' மெக்கானிக்.
திருமணமாகி நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. சிவகிரியை சேர்ந்தவர் சதீஷ், 29; இருவரும் ஹோண்டா ஆக்டிவாவை மொபட்டில், நேற்று முன் தினம் இரவு 9:20 மணியளவில் மாணிக்கம்பாளையம்-பெரியவலசு நால்ரோடு இடையே சென்றனர். ஈரோடு, பெரியசேமூர், ராசாம்பாளையத்தை சேர்ந்த குமார் மகன் பரத்ராஜ், 20, மற்றொரு மொபட்டில் எதிரே வந்தார். இரு மொபட்டுகளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் நிலை தடுமாறி விழுந்த பிரபாகரன் சம்பவ இடத்தில் பலியானார். மற்ற இருவருக்கும் காயம் ஏற்படவில்லை. வீரப்பன்சத்திரம் போலீசார் பிரபாகரன் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

