/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி 'டி.சி.,'க்கு கூடுதல் பொறுப்பு
/
மாநகராட்சி 'டி.சி.,'க்கு கூடுதல் பொறுப்பு
ADDED : ஜூலை 14, 2024 02:18 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, சென்னை பெருநகர மாநகராட்சி துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்-பட்டார். இதனால் ஈரோடு மாநகராட்சி நிர்வாக பணிகளை துணை கமிஷனர் சரவணக்குமார் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சரவணக்குமாருக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரவு செலவு கணக்கு சரிபாக்க, குடிநீர், மின்சார பில் போன்ற இதர பணிகளை மேற்கொண்டு கோப்புகளில் கையெ-ழுத்திட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் கையெ-ழுத்திடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அரசு திட்டம் தொடர்பான பணிகளில் கையெழுத்திட, கமிஷனருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால், அவருக்கு கையெழுத்திட அனு-மதியில்லை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.