/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்மாழ்வார் விருது பெற வேளாண் துறை யோசனை
/
நம்மாழ்வார் விருது பெற வேளாண் துறை யோசனை
ADDED : ஜூன் 28, 2024 01:06 AM
ஈரோடு, விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது' ஆண்டுக்கு, 3 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
முதல் பரிசாக, 2.5 லட்சம், 2ம் பரிசாக, 1.5 லட்சம் ரூபாய், 3ம் பரிசாக, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்துடன் பதக்கமும் உண்டு.
குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்திருக்க வேண்டும். முழு நேர உயிர்ம விவசாயியாக இருக்க வேண்டும். எவ்வித ரசாயன பொருட்களையும் விவசாயத்தில் பயன்படுத்தக்கூடாது. குறைந்தது மூன்றாண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டு, அதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
செப்.,30க்குள், https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற வலைதளத்தில், 100 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.