/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவில் அருகே தீக்குளித்த முதியவர் பலி
/
பண்ணாரி கோவில் அருகே தீக்குளித்த முதியவர் பலி
ADDED : ஆக 20, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகில் ஒரு முதியவர் நேற்று, உடலில் தீ வைத்து கொண்டார். சிறிது நேரத்தில் தீப்பற்றி எரியவே, அவ்வழியே சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவசரகால ஆம்புலன்ஸ் வாகனத்தில் மீட்கப்பட்டு, சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலே இறந்து போனார். போலீஸ் விசாரணையில் கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த விஜயகுமார், 60, என தெரிய வந்தது. என்ன காரணத்துக்காக தீக்குளித்தார் என தெரியவில்லை. இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

