/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் புளியம்பட்டிக்கு தண்ணீர் வரல!
/
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் புளியம்பட்டிக்கு தண்ணீர் வரல!
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் புளியம்பட்டிக்கு தண்ணீர் வரல!
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் புளியம்பட்டிக்கு தண்ணீர் வரல!
ADDED : செப் 01, 2024 03:58 AM
புன்செய் புளியம்பட்டி: அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டம் வாயிலாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் 145 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இத்திட்டத்தில் புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில், 489 ஏக்கர் பரப்பளவுள்ள காவிலிபாளையம் குளம், 80 ஏக்கர் புங்கம்பள்ளி குளம், 60 ஏக்கர் நல்லுார் குளம், நொச்சிக்குட்டை குளம் இணைக்கப்பட்டுள்ளன. திட்டம் நடைமுறைக்கு வந்து, 15 நாட்களாகியும் இந்த குளம், குட்டைகளுக்கு தண்ணீர் இன்னும் வரவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: காவிலிபாளையம் குளம், புங்கம்பள்ளி குளம், நல்லூர் குளம், நொச்சிக்குட்டை குளம் மற்றும் குட்டைகளுக்கு ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை. போதிய மழை இல்லாததால் குளங்களும் வறண்டு கிடக்கின்றன. உடனடியாக குளம், குட்டைகளுக்கு நீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.