/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காய்களால் 100 சத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு
/
காய்களால் 100 சத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு
ADDED : ஏப் 17, 2024 11:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தலில், ௧00 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி ஈரோடு தாலுகா அலுவலக நுழைவுவாயில், தக்காளி, முள்ளங்கி, பீட்ரூட், கேரட், அவரை, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயன்படுத்தி, 'தேர்தல் நாள் 19.-4.-2024' மற்றும் 100 சதவீதம் என நேற்று எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் முன் நின்று தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறை அலுவலர்கள், 100 சதவீத ஓட்டுபதிவை உறுதி செய்ய வலியுறுத்தினர்.

