/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகனுக்கு 12ல் பாலாபிஷேக பெருவிழா
/
சென்னிமலை முருகனுக்கு 12ல் பாலாபிஷேக பெருவிழா
ADDED : ஆக 07, 2024 01:30 AM
சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய ஆலை உரிமையாளர் சங்கம் சார்பாக, பாலாபிஷேக பெருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு, 57வது ஆண்டாக பாலபிஷேக பெருவிழா வரும், 12ம் தேதி நடக்கிறது.
அன்று காலை திருப்பால் குடங்கள் கைலாசநாதர் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு, நான்கு ரத வீதிகளிலும் வலம் வருகிறது. பிறகு படிக்கட்டுகள் வழியாக கோவிலை அடைகிறது. அங்கு காலை, 10:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. பால் குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள், தலைவர் முத்துசாமி, 97509-59697, உப தலைவர் ஈஸ்வர மூர்த்தி, 98430-08899 ஆகியோரை இந்த மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.