/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாழைத்தார், தேங்காய் ரூ.9.91 லட்சத்துக்கு ஏலம்
/
வாழைத்தார், தேங்காய் ரூ.9.91 லட்சத்துக்கு ஏலம்
ADDED : ஆக 25, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழைத்தார், தேங்காய்
ரூ.9.91 லட்சத்துக்கு ஏலம்
கோபி, ஆக. 25-
கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 58 ரூபாய், நேந்திரன், 36 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 510, தேன்வாழை, 600, செவ்வாழை, 910, ரஸ்த்தாளி, 630, பச்சைநாடான், 500, ரொபஸ்டா, 410, மொந்தன், 260 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 5,570 வாழைத்தார்களும், 8.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய் ஒன்பது ரூபாய் முதல் 16 ரூபாய் வரை, ௧௦,720 தேங்காய், 1.41 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.