/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பத்ரகாளியம்மன் கோவில் தேர் நிலை சேர்ந்தது
/
பத்ரகாளியம்மன் கோவில் தேர் நிலை சேர்ந்தது
ADDED : ஏப் 09, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த மாதம், 14ம் தேதி பூச்சாடுதலுடன் தொடங்கியது.
கடந்த, 3ம் தேதி தீ மிதி விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கடந்த, 5ல் தேரில் பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஜி.ஹச்., கார்னர், போலீஸ் ஸடேஷன் வரை இழுத்து செல்லப்பபட்டு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் நேற்று தேர் மீண்டும் வடம் பிடிக்கப்பட்டு இழுத்து வந்து, தேர்வீதியில் நிலை சேர்த்தனர். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

