/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் பைக் திருட்டு
/
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் பைக் திருட்டு
ADDED : மே 30, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,ஈரோடு, அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஈரோட்டை அடுத்த சேனாதிபதிபாளையத்தை சேர்ந்தவர் சம்பத் குமார், 47, தொழிலாளி. நேற்று காலை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, ஹோண்டா சைன் பைக்கில் வந்தார். வளாகத்தில் உள்ள டூவீலர் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்தி விட்டு, மருத்துவ சான்று பெற டாக்டரை சந்திக்க
சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்த பார்த்த போது பைக் மாயமானது தெரியவந்தது. மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது உறுதியானது. இதுபற்றி ஜி.ஹெச். போலீஸ் ஸ்டேஷன் போலீசார் விசாரிக்கின்றனர்.