/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு
/
கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த அழைப்பு
ADDED : ஆக 06, 2024 07:46 AM
ஈரோடு: திட்டமில்லா பகுதிகளில் கடந்த, 2011 ஜன., 1க்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, வரைமுறைப்ப-டுத்தும் திட்டத்தில், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வரும், 2025 ஜன., 31 வரை, கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி-யற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிட பகுதியில் அமையும் பட்சத்தில் அனைத்து வழி-முறைகளை பின்பற்ற வேண்டும். www.tcp.org.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்-கலாம்.
இதேபோல் மலைப்பகுதியில், 2016 அக்., 20க்கு முன் விற்பனை செய்யப்பட்ட மனை பிரிவை வரைமுறைப்படுத்தும் கால அவகாசமும், நவ., 20 வரை நீட்டிப்பு செய்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், www.tnlayouthillareareg.in என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம்.