/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
3,000 ஆண்டுகள் பழமையான மடவிளாகம் கோவிலில் தேரோட்டம்
/
3,000 ஆண்டுகள் பழமையான மடவிளாகம் கோவிலில் தேரோட்டம்
3,000 ஆண்டுகள் பழமையான மடவிளாகம் கோவிலில் தேரோட்டம்
3,000 ஆண்டுகள் பழமையான மடவிளாகம் கோவிலில் தேரோட்டம்
ADDED : மார் 25, 2024 01:19 AM
காங்கேயம்:காங்கேயம்
அருகே மடவிளாகத்தில், 3,௦௦௦ ஆண்டுகள் பழமையான அருத்ர கபாலீஸ்வரர்,
ரகுபதி நாராயண பெருமாள் கோவிலில், பங்குனி மாதத்தில் தேரோட்டம்
நடக்கிறது.
நடப்பாண்டு விழா கடந்த, 18ம் தேதி தொடங்கியது. நேற்று
முன்தினம் சோமாஸ்கந்தர், ஸ்ரீதேவி சமேத ரகுபதி நாராயண பெருமாள்
சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று காலை
சுவாமிகள் திருத்தேர்களுக்கு எழுந்தருளின. இதை தொடர்ந்து மாலை, 4:10
மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்
பிடித்து இழுத்தனர்.
கல்யாண சுப்பிரமணியர் தேர், ரகுபதி நாராயண
பெருமாள் தேர், கணபதி தேர், பிரகல நாயகி அம்மன் தேர் என நான்கு தேர்கள்
முன் செல்ல, பெரிய தேரில் சோமாஸ்கந்தர் தேர் வந்தது. 2 கி.மீ., துாரம்
வலம் வந்த தேர், ௬:௧0 மணிக்கு நிலை அடைந்தது. காங்கேயம் சுற்று வட்டார
ஆன்மிக பக்தர்கள், மக்கள் என ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர்.
பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் இன்று நடக்கிறது.

