/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளர்களுக்கு 'லீவு' தராவிடில் புகார் தெரிவிக்கலாம்
/
தொழிலாளர்களுக்கு 'லீவு' தராவிடில் புகார் தெரிவிக்கலாம்
தொழிலாளர்களுக்கு 'லீவு' தராவிடில் புகார் தெரிவிக்கலாம்
தொழிலாளர்களுக்கு 'லீவு' தராவிடில் புகார் தெரிவிக்கலாம்
ADDED : ஏப் 17, 2024 11:54 AM
ஈரோடு: தொழிலாளர் துணை ஆணையர் (பணிக்கொடை) முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்நாளில் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்து தொழிலாளர் இணை ஆணையர் பா.மாதவன் தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில், தேர்தல் நாளில் அனைத்து வகையான தொழில் நிறுவனங்கள், கடைகள், பீடி, சுருட்டு நிறுவன தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். அன்றைய தினம் சம்பள பிடித்தம் செய்யக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும். இது தொடர்பாக புகார்கள் இருந்தால், தொழிலாளர் துறையில் துவங்கப்பட்ட மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
விடுப்பு தொடர்பான புகாரை, ஒருங்கிணைப்பு அலுவலர் த.முருகேசன் - 96597 54343, கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள் திருஞானசம்பந்தம் - 94453 98751, ராகவன் - 70100 49948, அலுவலக தொலைபேசி: 0424 2270090 என்ற எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

