/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொதுத்தேர்வு நிறைவு:10ம் வகுப்பு மாணவ, மாணவியர் உற்சாகம்
/
பொதுத்தேர்வு நிறைவு:10ம் வகுப்பு மாணவ, மாணவியர் உற்சாகம்
பொதுத்தேர்வு நிறைவு:10ம் வகுப்பு மாணவ, மாணவியர் உற்சாகம்
பொதுத்தேர்வு நிறைவு:10ம் வகுப்பு மாணவ, மாணவியர் உற்சாகம்
ADDED : ஏப் 09, 2024 01:56 AM
ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 116 தேர்வு மையங்களில் மார்ச், 26ல் துவங்கியது.
இதில், 25,524 பள்ளி மாணவ, மாணவியர், 1,159 தனி தேர்வர்கள் எழுதினர். முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகபட்சமாக, 670 பேர் ஸ்கிரைபர் மூலம் தேர்வெழுதினர். கடைசி தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது.தேர்வு முடிந்ததும் மாணவ, மாணவியர் பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் வந்ததும் நோட்டு பேப்பர்களை கிழித்து மேலே வீசியும், பேனா இங்க்கை ஒருவர் மீது ஒருவர் தெளித்தும் கொண்டாடினர். மாணவ--மாணவிகள் அவர்களது தோழிகள், நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுத்து சென்றனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை, கடந்த, 5ம்தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 10, 12 தேதிகளில் நடக்கவிருந்த தேர்வு 22, 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு தள்ளி போயுள்ளது.

