ADDED : ஜூன் 09, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அரசு கலை அறிவியில் கல்லுாரியில், 340 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் நஜீம்ஜான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணினி அறிவியல் என ஏழு பாட பிரிவுகள் உள்ளன.
இப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, நாளை பொது கலந்தாய்வு நடக்கவுள்ளது. உரிய அசல் சான்றிதழ் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு செய்திக்
குறிப்பில் தெரிவித்துள்ளார்.