/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜூலைக்குப்பின் குடிநீர் வினியோகம்சீராகும்;நகராட்சி ஆணையர் தகவல்
/
ஜூலைக்குப்பின் குடிநீர் வினியோகம்சீராகும்;நகராட்சி ஆணையர் தகவல்
ஜூலைக்குப்பின் குடிநீர் வினியோகம்சீராகும்;நகராட்சி ஆணையர் தகவல்
ஜூலைக்குப்பின் குடிநீர் வினியோகம்சீராகும்;நகராட்சி ஆணையர் தகவல்
ADDED : மே 07, 2024 02:33 AM
ஈரோடு;புன்செய் புளியம்பட்டி நகராட்சி எலலைக்கு உட்பட்ட, வார்டு எண், 13ல் கடந்த, 4ல் குடிநீர் வினியோகம் கோரி மறியல் போராட்டம் நடந்தது.
இது தொடர்பாக புன்செய் புளியம்பட்டி நகராட்சி ஆணையர், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவுக்கு வழங்கிய விளக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:புன்செய் புளியம்பட்டி நகராட்சி எல்லைக்குள், 3 நாட்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த, 4ல் வார்டு எண், 13ல் குடிநீர் தாமதமாக வழங்கப்படுவதாக சாலை மறியல் நடந்தது. இறுதியாக அப்பகுதிக்கு கடந்த ஏப்., 28ல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதற்குள், நம்பியூர் சாலை பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக சாலையை தோண்டியபோது, குடிநீர் வினியோக குழாயில் உடைப்பு ஏற்படுத்தினர். இந்த உடைப்பு கடந்த, 3, 4ல் சரி செய்யப்பட்டது. உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
தவிர அம்ரூத்-2.0 திட்டத்தில், 52.07 கோடி ரூபாயில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் நடந்து வருகிறது. பவானிசாகர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து புன்செய் புளியம்பட்டி வரை பிரதான குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
குழாய் பதிக்கும் பணிக்கு இடையே, குழாய் உடைப்பு ஏற்பட்டதால், தேவையான அளவைவிட குடிநீர் குறைவாகவே வருகிறது. இதனால் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் தாமதமாகிறது. இருப்பினும் அனைத்து வார்டு மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆழ்துளை கிணற்று நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அம்ரூத்-2.0 திட்டத்தில் நடந்து வரும் பணிகள், ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் தினமும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வழி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.