/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மல்லிகை பூ வரத்து அதிகரிப்பால் 'சென்ட்' தயாரிக்க அனுப்பி வைப்பு
/
மல்லிகை பூ வரத்து அதிகரிப்பால் 'சென்ட்' தயாரிக்க அனுப்பி வைப்பு
மல்லிகை பூ வரத்து அதிகரிப்பால் 'சென்ட்' தயாரிக்க அனுப்பி வைப்பு
மல்லிகை பூ வரத்து அதிகரிப்பால் 'சென்ட்' தயாரிக்க அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 25, 2024 05:11 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், செவ்வந்திப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் தினமும் வருமானம் தரக்கூடிய குண்டுமல்லி பூக்களை பயிரிட்டுள்ளனர். இந்த பூக்களுக்கு, பங்குனி, சித்திரை மாதங்களில் சீசன் காரணமாக, 5 டன் மல்லிகை பூ உற்பத்தி செய்யப்பட்டு, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பூ மார்க்கெட்டுகளுக்கு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சீசன் இல்லாத விசேஷ நாட்களில், ஒரு கிலோ குண்டுமல்லி பூ, 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, சீசன் காரணமாக வரத்து அதிகரித்துள்ளதாலும், விசேஷங்கள் எதுவும் இல்லாததாலும், தினமும், 4 டன் வரை மல்லிகை பூக்கள் விற்பனையாகாமல் தேக்கமடைகிறது. இதை சமாளிக்கும் வகையில், விவசாயிகள் தினமும் திண்டுக்கல், கோவையில் உள்ள வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைகளுக்கு பூக்களை அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து, பொட்டிரெட்டிபட்டி பூ விவசாயி
சக்திவேல் கூறியதாவது:
கடந்த, 2 மாதமாக அதிக வெயில் காரணமாக, எருமப்பட்டி பகுதியில் மட்டும், தினசரி, 5 டன் வரை மல்லிகை பூக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது முகூர்த்த தினம், விசேஷங்கள் இல்லாததால் போதிய விலை கிடைக்கவில்லை. எனவே, அதை சமாளிக்கும் வகையிலும், பூக்கள் வீணாகாமல் இருக்கவும், தினமும் வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பி வருகிறேம்.
இவ்வாறு அவர் கூறினார்.

