/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்காக புதுமுயற்சி ஆகஸ்டில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் உதயம்
/
மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்காக புதுமுயற்சி ஆகஸ்டில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் உதயம்
மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்காக புதுமுயற்சி ஆகஸ்டில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் உதயம்
மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்காக புதுமுயற்சி ஆகஸ்டில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் உதயம்
ADDED : ஜூலை 18, 2024 01:20 AM
கோபி: மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக, கோபி வேளாண் அறி-வியல் நிலையம் சார்பில், முன்னோடி திட்டமாக, சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் உருவாக்கப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்டம், கோபி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் அதன் முதன்மை விஞ்ஞானி அழ-கேசன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், பர்கூர், கடம்பூர், தாளவாடி என மொத்தம், 28 சதவீதம் மலைப்பகுதிகள் உள்ளன. வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மலைப்பகுதிகளில், நீர்ப்பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு, பண்ணை மேம்பாடு என கடந்த, 40 ஆண்டுகளாக மேம்படுத்தப்படுகிறது. மலைப்பகு-தியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், அதுகுறித்த விழிப்பு-ணர்வை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தவும், கோபி வேளாண் அறிவியல் நிலையமும், நபார்டு வங்கியும் இணைந்து, சுற்றுச்-சூழல் சுற்றுலா மையத்தை உருவாக்கி வருகிறோம். மலைப்பாங்-கான பகுதியில் சுற்றுச்சூழலின் சிறப்பம்சம், அதை நம்பி அங்கு வாழும்
மக்களின் வாழ்வாதாரம்,
விலங்குகள் மற்றும் பறவையினங்கள் குறித்து அந்த சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்தின் மூலம் விபரங்கள் அறிந்து கொள்ள முடியும். வரும் காலத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அறிய, முன்னோடி திட்டமாக, சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் செயல் ப-டவுள்ளது.
அந்த திட்டம் வரும் ஆகஸ்ட் மாதத்தில், ஈரோடு மாவட்டத்தில் உதயமாகிறது. அந்த சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்தில், பழங்குடி-யினர் வசிக்கும் வீடுகளின் அமைப்பு, பாரம்பரிய விளையாட்-டுகள், பண்ணை மாதிரி செயல்விளக்கம், மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் அருங்காட்சியகம் என இருக்கும். அதேபோல் ஒவ்வொரு சிறப்பம் சங்களையும், சுற்றுலா பய-ணிகள் எளிதாக அறிந்து கொள்ள 'க்யூ ஆர்' கோடு தொழில்நுட்ப வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.