ADDED : ஆக 26, 2024 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: கோபி மின் பகிர்மான வட்ட கிளை, தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில், விரிவடைந்த செயற்-குழு கூட்டம், பவானி அடுத்த லட்சுமிநகரில் நேற்று நடந்தது. மின் வாரியத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டுள்ள, 5,௦௦௦ பேரை பணியமர்த்த வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடக்கும் வரை, இடைக்கால நிவாரணமாக மாதத்துக்கு, ௫,௦௦௦ ரூபாய் ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும் என்பது உள்பட தீர்மானமாக நிறை-வேற்றப்பட்டது. கூட்டத்தில் திட்ட தலைவர் கிருஷ்ண மோகன்ராஜ், மகளிர் செயலாளர் நித்யா, திட்ட பொருளாளர் சந்-திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.