/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூன்றாவது நாளாக மின் கம்பம் சீரமைப்பு
/
மூன்றாவது நாளாக மின் கம்பம் சீரமைப்பு
ADDED : மே 18, 2024 01:34 AM
ஈரோடு: ஈரோடு மாநகர பகுதியில் ஒரு வாரமாக, மாலையில் கடும் காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின் கம்பங்கள், மின் கம்பிகளில் மரக்கிளைகள், தட்டி போர்டு உள்ளிட்டவை விழுந்து மின்தடையை ஏற்படுத்தியது. கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு பகுதியாக, 1 மணி நேரம் வரை மின்தடை செய்து, மின் கம்பங்கள், மின் கம்பிகளை சீரமைத்து, மரக்கிளைகள், அதனை ஒட்டிய தட்டி போர்டு, பிளக்ஸ் போன்றவற்றையும் அகற்றி வருகின்றனர்.
வி.சி.டி.வி., சாலை, வ.உ.சி., பூங்கா பகுதி, ஏ.பி.டி., சாலை, வீரபத்திரா வீதி, காவேரி ரோடு, மேட்டூர் சாலை, இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, சத்தி சாலை, 16 ரோடு, நசியனுார் என பல பகுதிகளில் நேற்று சீரமைப்பு பணியை நிறைவு செய்தனர். விடுபட்ட பகுதிகளை வரும் நாட்களில் சீரமைக்க திட்டமிட்டுள்ளனர்.

