/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை பள்ளிகளில் ௨௮ல் குலுக்கல்
/
ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை பள்ளிகளில் ௨௮ல் குலுக்கல்
ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை பள்ளிகளில் ௨௮ல் குலுக்கல்
ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை பள்ளிகளில் ௨௮ல் குலுக்கல்
ADDED : மே 25, 2024 02:51 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 2024-25ம் கல்வி ஆண்டுக்கான, 25 சதவீத இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த பெற்றோர், விண்ணப்பித்த பள்ளிகளில் நடக்கும் குலுக்கலில் பங்கேற்க அழைத்துள்ளனர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதில் மாணவர் சேர்க்கைக்கு ஏப்., 22 முதல் மே, 20 வரை இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தனர்.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 104 மெட்ரிக் பள்ளி, ஒரு சுயநிதி பள்ளி, 77 மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகளில், 2,299 இடங்களுக்கு, 3,137 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதல் விண்ணப்பம் பெறப்பட்டதால், பள்ளிகளில் வரும், 28ல் குலுக்கல் மூலம் மாணவர் தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பித்த பெற்றோர், தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் குலுக்கலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

